234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி நம்பிக்கை

5 March 2021, 5:33 pm
CT ravi - updatenews360
Quick Share

நீலகிரி : தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஊட்டியில் வாகன பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் மத்திய அரசு புதிதாக 12 மருத்துவக் கல்லூரியை துவக்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் ஒன்று. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு ரூபாய் 63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ரூ.1.3 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளது, என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது :- தமிழகம் முழுவதும் நாங்கள் வெற்றிக்கொடி யாத்திரை செல்கிறோம்.
அனைத்து இடங்களிலும் பாஜகவிற்கு வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுகவுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.

தமிழ் கலாச்சாரத்தை பாஜக பாதுகாத்து வருகிறது. அதிமுக ஜனநாயக அடிப்படையில் கொண்ட கட்சி. திமுகவில் ஜனநாயகம் இல்லை. குடும்ப அரசியலை செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள். தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தவும் தமிழ் கலாச்சாரத்தை காக்கவும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது. பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி ஒரு கோமாளி அரசியல் செய்து வருகிறார். அவருடைய அரசியல் எடுபடாது, என்றார்.

Views: - 1

0

0