நீட் தேர்வு எழுதி விட்டு வந்த தர்மபுரி மாணவி தற்கொலைக்கு முயற்சி

14 September 2020, 10:32 pm
Quick Share

கிருஷ்ணகிரி: மாரண்டஅள்ளி அருகே நீட் தேர்வு எழுதி விட்டு வந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தை சேரந்த நஞ்சுண்டன் என்பவரது மகள் மோகனப்பிரியா(17). இவர் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை சேலத்தில் உள்ள மையத்தில் எழுதினார். இவர் தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மிகவும் சோகத்துடன் காணப்பட்ட மோகனப்பிரியா, வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை இன்று மாலை அளவுக்கதிகமாக சாப்பிட்டுள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் பாலக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 1

0

0