நீட் விலக்கு மசோதா விவகாரம்… அடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!!!

Author: Babu Lakshmanan
8 March 2022, 6:07 pm

நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது, விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “மாற்றங்கள்” இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :- முத்தமிழறிஞர் கலைஞர் மகளிருக்கென ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தினார். மகளிர் சுய உதவிக்குழு, மகப்பேரு உதவி, திருமண உதவி, மகளிர் உள்ளட்டாசி அமைப்புகளில் 33% இடஒதுக்கீடு அமல்படுத்தினார். அதேபோல் மகளிருக்கான உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தி 21 மேயர்களில் 11 பெண்களை மேயராக்கிய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சாரும்.

முத்தமிழறிஞர் கலைஞரை போல் முதலமைச்சரும் ஏராளமான திட்டங்களை செய்து வருகிறார். மகளிருக்கு இலவச பேருந்து, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறோதோ அப்போதெல்லாம் ஏராளமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எதிர்காலத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் போது முன்னுரிமை அளிக்கப்படும். நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது. விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம், எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!