நீட் தேர்வு மீது மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் பிரிவினைவாத சக்திகள் : எச். ராஜா தகவல்..!

12 September 2020, 6:08 pm
H raja - Updatenews360
Quick Share

சிவகங்கை : நீட் தேர்வு குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அச்சுறுத்தலால் கடந்த ஒரு வாரத்தில் விக்னேஷ் மற்றும் ஜோதிஸ்ரீ துர்கா ஆகிய இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இதே கோரிக்கை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நீட் குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்துவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் நடந்துள்ள முறைகேட்டில் மத்திய அரசின் தவறு எதுவும் இல்லை. பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியில் பிரச்சனை கிடையாது. 2021 சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணியே தொடரும். கூட்டணி பற்றிய புரிதல் இல்லாததால், அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசின் கொரோனா தடுப்பு பணிகளை ஸ்டாலின் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது. நீட் தேர்வு மீது பிரிவினைவாத சக்திகள் மாணவர்களிடம் பயத்தை ஏற்படுத்துகின்றன, எனக் கூறினார்.

Views: - 19

0

0