‘நீட்‘ தேர்வு மையம் முன்பு போராட்டம் : குண்டு கட்டாக கைது!!

13 September 2020, 12:32 pm
Neet Exam Protest - Updatenews360
Quick Share

மதுரை : நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வு மையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைக்க கோரியும் மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் கேந்திரா வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தின் முன்பாக நீட் தேர்விற்கு எதிரான கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைகளில் நீட் தேர்விற்கு எதிராக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கண்டன கோஷங்களை எழுப்பியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிசார் தரதரவென இழுத்து சென்று போலிசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் போராட்டம் நீடிக்கும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

Views: - 0

0

0