‘வயசு அறியாம ஏதோ தப்பு பண்ணீட்டேன்’ : கெஞ்சிய காதல் ஜோடிகள்..! (வீடியோ)

10 August 2020, 4:47 pm
Lovers - updatenews360
Quick Share

நெல்லை : காதலனுக்கு கிப்ட் கொடுக்க வந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை பிடித்து, கட்டாயப் படுத்தி வீடியோ எடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேசம் லக்னோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், நெல்லை மாவட்டம் ஆவின்புரத்தைச் சேர்ந்த வாலிபரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த காதல் ஜோடிகள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். பின்னர் அந்த காதல் ஜோடி அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர், காதல் ஜோடியை மிரட்டி செல்போனில் படம் எடுத்துவிட்டு, அவர்களிடம் இருந்து செல்போன், பணம், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை பறித்துள்ளனர்.

மேலும், அந்த பெண்ணையும், அவரது காதலனையும் கடுமையாக தாக்கி விட்டு, அதனை வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்ததாக கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த அருணாசலம் (20) என்பவரை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகிறார்கள்.

Views: - 9

0

0