தந்தை இறந்தபோதிலும் சுதந்திர தின அணிவகுப்பை தலைமை தாங்கிய பெண் ஆய்வாளர் – நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய ஆட்சியர்..!

27 August 2020, 9:34 am
Quick Share

காவல் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு, ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நாடு முழுவதும் கடந்த 15-ஆம் தேதி 74-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கோடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த அணிவகுப்பை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்த ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் மகேஸ்வரியின் தந்தை கடந்த 14-ஆம் தேதி இரவு உடல்நல குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

இருப்பினும் அணி வகுப்பை ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், அவர் தந்தையின் இறப்புக்கு போகாமல் அணிவகுப்பை சிறப்புடன் முன்னெடுத்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் உள்ளிடோருக்கு மகேஸ்வரியின் தந்தை இறந்த தகவல் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, மகேஸ்வரிக்கு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆறுதல் கூறி சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்கள் மற்றும் உடகங்கள் வளியாக தெரியவரவே பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மகேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்தநிலையில், தந்தை இறந்த நிலையிலும் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொண்டு கடமை தவறாமல் பணியாற்றிய காவல் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு, ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Views: - 28

0

0