கோவை ரூட் க்ளியர் பா..முதல்வர் திறப்புக்கு தயாரான பாலம்: மிளிருது வர்ண ஜாலம்…!!

Author: Sudha
8 August 2024, 10:52 am

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமாக உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னைக்கு தி. நகரை போல கோவையில் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்து உள்ளன.

கோவையில் இருந்து கேரளா செல்லும் சாலையாகவும் உக்கடம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ள பகுதியாக உள்ளது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணி 481 கோடி ரூபாய் செலவில் 2018 – ஆம் ஆண்டு தொடங்கியது.

உக்கடம் மேம்பாலம் எப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றால், ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், உக்கடம் மேம்பாலத்தில் ஏறி செல்வபுரம் பைபாஸ் சாலையை ஒட்டிய இடத்தில் இறங்கி ஒப்பணக்கார வீதியை அடையலாம். கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை 4 வழித்தடமாகவும், ஒப்பணக்கார வீதியை அடையும் இறங்கு தளம் 2 வழித்தடமாகவும் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பாலத்தை நாளை திறந்து வைக்கின்ற நிலையில், பாலம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றது. உக்கடம் மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

  • tvk reference in tourist family movie தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?