திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டிடம் : நாளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!

6 July 2021, 12:33 pm
Stalin Thiruvarur- Updatenews360
Quick Share

திருவாரூர் : திருவாரூருக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் நாளை நாளை மருத்துவக் கல்லூரியில் கட்டிடத்தை திறந்து வைத்து ஆய்வு நடத்த உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இன்று மாலை திருவாரூர் வருகிறார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊருக்கு இன்று திருவாரூர் வருகிறார்.

காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். நாளை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். பின்னர் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கலந்து கொள்கிறார்.

முதலமைச்சர் திருவாரூர் வருகையையொட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. திருவாரூர் நகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பவள விழா நுழைவாயில் புதுப்பிக்கப்பட்டது .

முதலமைச்சர் வருகையையொட்டி இன்றும் நாளையும் ட்ரோன் கோமரா பறக்க மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தடை விதித்துள்ளார். திருவாரூர் நகர காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் சுற்றுலா மாளிகையில் தமிழக முதலமைச்சர் ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா மாளிகை முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Views: - 155

0

0