தென்பெண்ணையில் புதிய அணை.. தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைத்து விட்டது : ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு!!

3 July 2021, 1:41 pm
RB Udayakumar - Updatenews360
Quick Share

மதுரை : 6 மாவட்டங்களை பாதிக்கும் வண்ணம் தென்பெண்ணையில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைத்து விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

6 மாவட்டங்களை பாதிக்கும் வண்ணம் தென்பெண்ணையில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைத்து விட்டது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கச்சத்தீவில் தான் தங்கள் வலைகளை காய வைத்து அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்கள். ஆனால் இந்திய வரைபடத்தில் இருந்த அந்த கச்சத்தீவு காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் காவு கொடுக்கப்பட்டது.

ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை தொடர்ந்து ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் இதில் வருவாய்த் துறையும் அரசின் சார்பில் சேர்க்கப்பட்டு உரிமையை மீட்க வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஜெ.வுக்கு பின் எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். நிச்சயம் ஜெ.ஆட்சி தொடர்ந்து இருந்திருந்தால் அதில் கச்சத்தீவு உரிமையை மீட்டெடுத்து அதில் வெற்றியை சாதித்து காட்டி இருப்பார்கள்.

120 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை இருந்தது. அதில் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விவசாய மக்களின் உரிமையை மீட்டுத் தந்தது எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும்தான் என கூறினார்.

முல்லைப் பெரியாறு உரிமை பறிக்கப்பட்ட போது திமுக முதலில் அறப்போராட்டம் என்றார்கள். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் என்றார்கள். அதனைத் தொடர்ந்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்கள்.ஆனால் எதையும் நடத்தவில்லை.

ஆனால் ஜெயலலிதா ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அவர்கள் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் காட்டினார்கள். அதனை தொடர்ந்து 152 அடியாக நிச்சயம் உயர்த்தித் தருவேன் என்று அவர்கள் கூறினார்கள்.அதனைத் தொடர்ந்து ஜெ.வின் எண்ணத்தை நனவாக்கும் வண்ணம் பல்வேறு முயற்சிகளை எடப்பாடியாரும், ஓபிஎஸ் எடுத்தனர்.

கிருஷ்ணகிரி கடலூர் உள்ளிட்ட 6 மாவட்ட மக்களுக்கு பயன் பெறும் தென் பண்ணையில் சத்தமின்றி புதிய அணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. இதன் மூலம் 6 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கு நடைபெற்ற மீனவரணி கூட்டத்தில் முதன் முதலாக கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இக்கூட்டத்தின் வாயிலாக தமிழகத்திற்கு துரோகம் இழைத்த கர்நாடக அரசை நாங்கள் கண்டிக்கிறோம்

Views: - 70

0

0