புதுச்சேரி திரையரங்குகளில் புதுப்படம் ரிலீஸ் : நடிகர் சந்தானம் படம் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி..

14 November 2020, 4:41 pm
New Film - Updatenews360
Quick Share

புதுச்சேரி : தீபாவளியை ஒட்டி கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் சந்தானம் நடித்த பிஸ்கோத் மற்றும் இரண்டாம் குத்து ஆகிய புதிய படங்கள் திரையிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் 50% இருக்கைகளுடன் புதுச்சேரியில் கடந்த மாதம் 15ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டது இருந்தபோதிலும் பழைய படங்கள் மற்றும் ஆங்கில படங்கள் திரையிடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் சந்தானம் நடித்த பிஸ்கோத் மற்றும் இரண்டாம் குத்து ஆகிய புதிய படங்கள் திரையிடப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தானம் நடித்த திரைப்பட வெளியானதால் புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்தானம் படத்திற்கு மலர்தூவி பாலாபிஷேகம் செய்து இனிப்புகளை வாழங்கி கொண்டாடினர்.

Views: - 32

0

0