தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து புதிய அறிவிப்பு : பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 9:47 am
School Leave - Updatenews360
Quick Share

தமிழக பள்ளிக்கல்வித் துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு முடிந்த பின், அக்.,1 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி வரையும், அரசு பள்ளிகளின், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 9ம் தேதி வரையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேநேரம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பையும், பள்ளிக்கல்வித் துறை வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, நேற்று பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, வரும் 10ம் தேதி திறக்க வேண்டும்’ என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

அதற்கு, பொது தேர்வு மாணவர்களுக்கு அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். மற்ற வகுப்புகளுக்கு பெற்றோர் ஒப்புதல் இன்றி வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Views: - 380

0

0