“புதிய புயல்“ : கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை!!
30 November 2020, 5:34 pmகன்னியாகுமரி : தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறி வரும் நிலையில் அரபிகடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப மீன் வளத்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறி வரும் நிலையில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில்கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் அரபி கடலில் தகவல் தெரியாமல் மீன் பிடித்து வருகின்றனர்.
தொடர்ந்து அரபி கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல மீன் வளத்துறை தடை விதித்துள்ள நிலையில் ஏற்க்கனவே ஆழ்கடலுக்கு தகவல் தெரியாமல் மீன் பிடித்து வரும் விசை படகு மீனவர்களுக்கு உறவினர்கள் மூலம் தகவல் கொடுக்கவும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் தூத்தூர் மண்டல மீனவ கிராமங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.
0
0