“சிங்குச்சா, சிங்குச்சா“ : நெல் நாற்றுகளை காப்பாற்ற புதிய யுக்தி!

16 September 2020, 5:53 pm
Paddy - updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் பகுதியில் பறவைகளிடம் இருந்து நெல் நாற்றுகளை காப்பாற்ற விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாயிகள் கரும்பு, வாழை, நெல், உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் சத்தியமங்கலம் நெகமம் பகுதியிலுள்ள விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்ய அவருடைய தோட்டத்தின் ஒரு பகுதியில் விதைகளை தூவி நெல் நாற்று பயிரிட்டுள்ளார்.

இந்த நெல் நாற்றுகளை குருவி, புறா, மயில் போன்ற பறவைகள் சேதப்படுத்தாமல் இருக்க பலவிதமான வண்ணங்களைக் கொண்ட புடவைகளை சுற்றியும் கட்டி புதிய யுத்தியை கையாண்டு வருகிறார்.

இதேபோன்ற யுக்தியை மற்ற விவசாயிகளும் பயன்படுத்தினால் பறவைகளிடம் இருந்து நெல் நாற்றுகள் காப்பாற்றப்படும் என அப்பகுதி விவசாயிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.