திருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு!!

12 June 2021, 8:02 pm
Suicide- Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே 10-மாதத்திற்கு முன்பு திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர்கள் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள காதக் கோட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் நவீன் குமார் ( வயது 29). 9-ம் வகுப்பு வரை படித்த இவர் கட்டிட தொழிலாளி ஆவார்.

இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியை சேர்ந்த திருமன் என்பவரது மகள் நித்யா (வயது 21). இவர் பி.சி.ஏ பட்டதாரியான இவருக்கும் நவீன் குமாருக்கும் திருமணம் நடைபெற்றது.

நவீன்குமார் குடும்பத்தில் புதுமண தம்பதிகள் இருவரும் உட்பட அவரது தாய், தந்தை மற்றும் சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 6-மாத குடும்ப வாழ்க்கைக்கு
பின் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக நவீன் குமார் நித்தியா ஆகிய இருவரும் அருகே ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் பெயர்ந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நித்யாவிற்கு கடந்த 15- நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மார்க்கம்பட்டி யிலுள்ள தனது தாயார் வீட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை தங்கியுள்ளார். இவருடன் இவரது கணவர் நவீன்குமார் உடன் இருந்துள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் காதக்கோட்டையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். நேற்று காலை 6-மணிக்கு நவீன் குமார் வழக்கம்போல கட்டிடப் பணிக்கு சென்றுவிட்டார்.

நித்யா காலையில் தனது வீட்டில் குழாயில் குடிநீர் எடுத்து வந்ததாகவும் துணிகள் துவைத்து வைத்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து காலை சுமார் 10 மணி அளவில் நவீன் குமார் தனது வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார்.

அப்பொழுது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தது. நவீன் குமார் கதவை தட்டியுள்ளார். பலமுறை தட்டியும் எந்த பதிலும் இல்லாத காரணத்தால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்யா வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் அக்கம்பக்கத்தினர் மற்றும் அருகே உள்ள தனது தாய் தந்தையர் அனைவரையும் அழைத்துள்ளார். அவர்கள் வந்து தூக்கில் தொங்கிய நித்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது நித்யா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறவே அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் நித்யாவின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார். மருத்துவமனைக்கு வந்த நித்யாவின் பெற்றவர் நவீன் குமார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு மூலனூர் காவல் நிலையத்தில் எனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தனர்.

புகாரை பதிவு செய்த மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வித்தியாவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த தாராபுரம் டிஎஸ்பி எட்வின் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். இந்த சம்பவம் காதக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 289

0

0