ஆடிப்பெருக்கு கோலாகலம் : காவிரி ஆற்றில் தாலி பிரித்து படையலிட்டு வழிபட்ட புதுமணத் தம்பதிகள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 10:36 am

ஆடி பதினெட்டு முன்னிட்டு புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் வந்து திருவையாறு காவிரி ஆற்று புஷ்பம் மண்டபம் படித்துறையில் தாலி பிரித்து படையல் இட்டு சிறப்பு வழிபாடு.

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் விழாவை சிறப்பாக கொண்டாடி வரக்கூடிய நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக காவிரி ஆற்றில் போதிய அளவுக்கு தண்ணீர் வராததாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாகவும் ஆடிப்பெருக்கு விழா என்பது கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு காவிரியில் அதிக அளவு தண்ணீர் வருவதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் கல்லணை திருக்காட்டுப்பள்ளி திருவையாறு கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

புதுமண தம்பதிகள் தங்கள் திருமண தாலி மற்றும் திருமண மாலையை பிரித்து ஆற்றில் விட்டும் காவிரி தாய்க்கு பழங்கள் காய்கறிகள் அரிசி உள்ளிட்டவை வைத்து படையலிட்டு வழிபாடு செய்தும் ஆடிப்பெருக்கு விழாவை மிக விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் வராத நிலையில் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால் மிக விமர்சையாக கொண்டாடுவதாகவும் தெரிவிக்கின்றனர் புதுமண தம்பதிகள்.

காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் காவிரி கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட வருபவர்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என காவல்துறையினர் ஒலிபெருக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காவலர்கள் கண்காணிக்க கூடிய பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!