கிராமத்தில் புகுந்த மழை வெள்ளம்.! சிக்கிய மலைவாழ் மக்கள்.! மீட்கும் பணி மும்முரம்.!!

4 August 2020, 12:14 pm
Nilgiri Flood- Updatenews360
Quick Share

நீலகிரி : கன மழையினால் கூடலூர் அருகேயுள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் புகுந்ததால் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 5 நாட்களாக கூடலூர், நடுவட்டம், தேவாலா ஆகிய பகுதிகளில் பெய்து வருகிறது. நேற்று கூடலூரில் பலத்த மழையின் காரணமாக காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் புத்தூர் வயல், குரும்பன் வயல், பகுதிகளில் ஆதிவாசி மக்கள் குடியிருப்பில் வெள்ளம் புகுந்தது.

இதில் 15 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயனைப்புத்துறையினர் கயிறு மூலம் மீட்கும் பணியில் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் 201 மி. மீ மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 32

0

0