நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

Author: Prasad
19 June 2025, 7:11 pm

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின் நிர்வாகத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க அருணகிரிநாதருக்கு உத்தரவிடக்கோரி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தா ஆதீனத்திற்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டது.

nithyananda lives in usk near australia said by his disciple

இந்த தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா  மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நித்யானந்தா எங்கு உள்ளார்? எனவும் கைலாசா எங்குள்ளது? எனவும் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த நித்யானந்தாவின் சீடர் “ஆஸ்திரேலியா நாட்டின் அருகில் உள்ள USK என்னும் தனி நாட்டில் நித்யானந்தா வாழ்கிறார் எனவும் அந்நாடு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நாடு எனவும் பதில் அளித்தார். இச்செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!