நிவர் புயல் கரையை கடந்திருந்தாலும் 144 தடை உத்தரவு தொடரும் : புதுச்சேரியில் அதிரடி !!

26 November 2020, 12:51 pm
pondy - updatenews360
Quick Share

நிவர் புயல் கரையை கடந்த நிலையிலும், இன்று மாலை வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவை நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது. ஆரம்பத்தில் அதி தீவிர புயலாக கரையைக் கடந்த புயல், பிறகு படிப்படியாக தீவிர புயலாகவே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. மேலும், மரங்கள் சரிந்து விழுந்து பல்வேறு இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்திருந்ததாலும், தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்கள் வீடுகளில் இருக்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, புயல் கரையை கடப்பதற்கு முன்பாக, இன்று காலை 6 மணி வரை மட்டுமே 144 தடை அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 19

0

0