நிவர் புயல் : தண்டோரா மூலம் தருமபுரி மக்களுக்கு எச்சரிக்கை!!

25 November 2020, 2:41 pm
Thandora - Updatenews360
Quick Share

தருமபுரி : கிழக்கு புற எல்லைப் பகுதிகளில் நிவர் புயல் குறித்து பொதுமக்களிடையே தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

நிவர் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 3 மாவட்டங்களை ஒட்டியுள்ள தருமபுரி மாவட்டத்தின்  கிழக்குப் புற எல்லையான கோட்டப்பட்டி, சிக்களூர், நரிப்பள்ளி, சிட்லிங் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டப் பகுதியில் உள்ள கோட்டப்பட்டி, தீர்த்தமலை, சிட்லிங் உள்ளிட்ட மலை கிராமங்கள் மற்றும் அரூர் சுற்றியுள்ள கீரைபட்டி, கொளகம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தண்டோரா மூலம் புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

தேவையில்லாமல் ஆட்கள் நடமாட்டம் வேண்டாம் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  

Views: - 0

0

0