கரும்பு இல்லையா? குட்டியுடன் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஆக்ரோஷத்தை காட்டிய யானை!!
Author: Udayachandran RadhaKrishnan23 October 2021, 1:46 pm
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை வழிமறித்து பக்க கண்ணாடியை உடைத்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் காராப்பள்ளத்தில் வன சோதனைச் சாவடி உள்ளது.
இந்த சாலை முழுவதும், இருபக்கமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், இந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை வழிமறித்து, கரும்புகளை தின்று நீண்ட நேரத்திற்கு பிறகே லாரிகளை வழி அனுப்புவது வழக்கம்.
இதனால் அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் அரசுப் பேருந்தை குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று வழிமறித்தது.
வழக்கமாக கரும்புகள் இருக்கும் என நினைத்து அருகில் வந்த காட்டு யானை கரும்புகள் இல்லை என தெரிந்ததும் அரசுப்பேருந்தின் வலதுபுற பக்க கண்ணாடியை உடைத்தது. தும்பிக்கையை பேருந்தின் முன்பக்க கண்ணாடி முன்பும் தடவிவிட்டு குட்டியுடன் திரும்பிச் சென்றதால் பேருந்தில் வந்த பயணிகள் நிம்மதியடைந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு யானை காட்டுக்குள் சென்ற பிறகு அங்கிருந்து பேருந்து மீண்டும் புறப்பட்டு சென்றது.
0
0