சிறிதளவு மாற்றமில்லை : 10 வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2021, 8:30 am
Petrol Price - Updatenews360
Quick Share

சென்னை : பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 10வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது.

இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.39க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது.

Views: - 290

0

0