இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வா?: வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
12 October 2021, 8:18 am
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ101.53க்கும், டீசல் ரூ.97.26க்கும் விற்பனையானது.
பெட்ரோல் நேற்று 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 209

0

0