ஜூன் 2க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது : அண்ணாமலை உத்தரவாதம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 12:41 pm

ஜூன் 2க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது : அண்ணாமலை உத்தரவாதம்..!!

பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாகவே வைத்திருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் தி.மு.க.,வினர் லஞ்சம் வாங்குகின்றனர். தேர்தல் நேரத்தில் பணத்தை கொடுத்து ஏமாற்றுகின்றனர்.

நான் வெற்றிபெற்றால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டுவந்தே தீருவேன். அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.எல்லோரின் மனநிலையையும் நான் புரிந்துகொண்டுள்ளேன்.

தமிழகத்தில் கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மவுன விரதம் இருந்தனர். ஜூன் 2-க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது. அந்த உத்தரவாதத்தை நான் கொடுக்கிறேன் என பேசினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!