இனி உதயசூரியனே உதிக்காது.. அண்ணாமலையே சொல்லிட்டாரு : சிலாகித்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2025, 6:57 pm

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.பி.எஸ்.சேனாபதி தலைமை தாங்கினார். ஒன்றிய கழகச் செயலாளர்கள் கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியணன், கார்த்திகேயன்,பகுதி கழக செயலாளர்கள் செந்தில்குமார், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும்மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் காந்தி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்கினர் .

ராஜன் செல்லப்பா பேசியதாவது, கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் கடந்த கடந்த ஏழாம் தேதி முதல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார், இதுவரை 110 தொகுதிகளில் 60 லட்சம் மேற்பட்ட மக்களை சந்தித்துள்ளார் எழுச்சி பயணத்தை மேற்கொள்ளும் போது மக்கள் எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர்.இந்த எழுச்சிபயணத்தில் தொடர்ந்து திமுகவின் அவலங்களையும், திமுகவின்மக்கள் விரோத செயல்களை மக்களிடத்தில் தோலூருத்தி காட்டுகிறார் இதுவரை ஸ்டாலின் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை எந்த மறுப்பும் கூறவில்லை

இன்றைக்கு பாஜகவை சார்ந்த அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வருவார் என்று கூறுகிறார், அதே போல பாரிவேந்தர் மீண்டும் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வருவார் என்று கூறுகிறார். இப்படி கூட்டணி கட்சித் தலைவர்கள், மக்கள் அனைவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சர் வருவார் என்று கூறுகிறார்கள்.

எடப்பாடியாருக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது செல்லும் இடம் எல்லாம் மக்கள் கடலில் நீந்தி தான் மக்களை சந்திக்கிறார். வருகின்ற 1ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை எடப்பாடியார் மேற்கொள்கிறார்.

குறிப்பாக 2 ம் தேதி மதுரை கிழக்கு தொகுதியில் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார் இந்த எழுச்சி பயணத்தின் மூலம் மதுரை கிழக்கு தொகுதி எப்பவும் அதிமுக கோட்டை என்ற வரலாற்றை உருவாகும் வகையில் அமையும். மதுரை கிழக்கு தொகுதியில் திமுக அதிகாரம் அதிக நாள் நீடிக்காது.2026 சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் நிச்சயம் திமுக தோல்வியை பெறும் அதிமுக மாபெரும் வெற்றி வரலாறு படைக்கும்

குறிப்பாக இன்றைக்கு தமிழக முழுவதும் திமுகவிற்கு எதிர்ப்பு அலை வீசுகிறது, எடப்பாடியாருக்கு ஆதரவு அலை வீசுகிறது. மதுரை கிழக்கு தொகுதியில் 30 ஆயிரம் மக்கள் திரண்டு எழுச்சிமிகு வரவேற்பை எடப்பாடியாருக்கு அளிக்க வேண்டும் மதுரை கிழக்கு தொகுதி தான் எடப்பாடியாருக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்தது என்ற வரலாற்றை நீங்கள் அனைவரும் உருவாக்கி தர வேண்டும் என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!