ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க இனி நேரில் செல்ல தேவையில்லை : ‘வாட்ஸ்-அப்’ மூலம் மனு அளிக்க ஏற்பாடு.!

8 July 2021, 11:12 am
Cbe Collector - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வாட்ஸ் அப்பில் புகார்கள் மற்றும் தங்களது கோரிக்கையை தெரிவிக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட மக்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகள், புகார்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பது வழக்கம். இதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய “கிரீவன்ஸ் டே” வைக்கப்பட்டு குறைகள் கேட்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஆட்சியர் அலுவலகம் நேரில் சென்று புகார் தெரிவிப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் ஐ.ஏ.எஸ்,. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய முயற்சியை தொடங்கியுள்ளார்.

இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை “94875 70159” என்ற இந்த பிரத்தியேக எண்ணில் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Views: - 144

0

0