கேப்டன் புகைப்படத்தை எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது… பிரேமலதா போட்ட முக்கிய கண்டிஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2025, 4:07 pm

வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்தகிண்டு, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்வது குறித்தும் தேர்தல் வியுகம் அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா, எல்லா கட்சியினுடைய நம்பிக்கை கட்சி வளர்ந்து ஆட்சி பிடிக்க வேண்டும் என்பது எல்லா கட்சியினுடைய நம்பிக்கையாக உள்ளது

வரும் சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கப் போகிறது? எப்படி எல்லாம் ஜெயிக்க வேண்டும் எங்கெல்லாம் ஜெயிக்க வேண்டும் என கலந்து ஆலோசனை செய்து வருகிறோம்.

அந்த வகையில் உங்களுடைய நம்பிக்கைகளை தொண்டர்களிடம் வெளிப்படுத்தி வருகிறோம் யாருடன் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பாருங்கள் தற்போது கட்சி வளர்ச்சி நோக்கியை மட்டுமே சென்று கொண்டிருக்கிறோம்

ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூர் மாநாட்டில் தெளிவான யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது

ஆணவ படுகொலைகள் லாக்கப் படுகொலைகள் கலாச்சாரம் எங்கு உள்ளது போதை கஞ்சா கபின் உள்ளிட்ட பல்வேறு அதிகரித்துள்ளது நகை கொள்ளை கொலை சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள முதலமைச்சர் சட்ட ஒழுங்கை சீர் செய்ய தகுந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆவணப்படுகைகளை தடுக்க தனி சட்டம் இயற்றினால் அதனை தேமுதிக வரவேற்கிறது. நம் நாட்டில் தான் பாரதியார் பெரியார் எல்லோரும் ஜாதிகள் இல்லையடி பாப்பா எப்போ சொல்லிவிட்டு சென்றார்கள்.

இன்றைக்கு ஜாதி ஒழிந்ததா தற்போது ஜாதிகள் வைத்து தான் கொலைகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு தனிநபரும் பெரியவர்கள் சொன்னதை நாம் பின்பற்ற வேண்டும்

எனவேதான் தேமுதிக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்று ஏற்கனவே விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.அதுதான் எங்கள் வழி.

நிரையும் குறையும் கலந்த ஆட்சியாக திமுக உள்ளது. அதற்கான மார்க்கு தான் 50 என்று கூறினேன்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆட்சியை பாராட்டியா? பேசுவார். எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஆளும் கட்சியை எதிர்த்தும் குரல் கொடுப்பதுகுறை சொல்வதும் தான் எதிர்க்கட்சி. அதனால் அவர்கள் பணியை அவர்கள் செய்து வருகிறார்கள்.

எல்லாருக்கும் அவர் அவர்கள் கட்சி ஜெயிக்க வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. தேமுதிக ஒரு அரசியல் கட்சி. எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் .

எனவே எந்த ஒரு கட்சியும் விஜயகாந்த் படத்தை என்றைக்கும் யாரும் பயன்படுத்தக் கூடாது. கூட்டணியில் வரும் கட்சியோடு தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தலாம். தனிப்பட்ட முறையில் கேப்டன் விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அவர் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!