புரட்டாசி சனிக்கிழமைகளில் காரமடை கோவிலில் அனுமதி இல்லை : ஆட்சியர் அறிவிப்பு!!

1 October 2020, 8:16 pm
Cbe Collector 1- updatenews360
Quick Share

கோவை: கொரோனா பரவல் காரணமாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளா வரும் 3,10 மற்றும் 17ம் தேதிகளில் பக்தர்களும் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற இயலாத நிலை ஏற்படக்கூடும்.

இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி மேற்கண்ட தினங்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற தினங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருக்கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Views: - 47

0

0