கோவில் கும்பாபிஷேகத்தில் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பங்கேற்க கூடாது : பாஜக எம்எல்ஏ காந்தி வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 1:27 pm
Bjp Mla Gandhi - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து அமைச்சர்கள் தலைமை ஏற்க வேண்டும் என பா.ஜ.,எம்.எல்.ஏ.,காந்தி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் இந்து மதநம்பிக்கை இல்லாதவர்கள் கலந்து கொள்ள தமிழக அரசும் , இந்து அறநிலைய துறையும் அனுமதிக்க கூடாது என நாகர்கோவில் தொகுதி எம். எல். ஏ.,எம்.ஆர் காந்தி தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட பாஜக மேல்புறம் ஒன்றியம் சார்பாக மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் கழுவன்திட்டையில் நடைபெற்றது பாஜக ஒன்றிய தலைவர் சேகர் தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி , மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட பாஜக பல நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் காந்தி இந்து ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடத்துவது அரசு மற்றும் அறநிலைய துறையின் கடமை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நூற்றாண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்து கோயில்களில் யார் வேண்டுமானாலும் வரலாம் வணங்கலாம்.

ஆனால் ஆலய நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குவதோ துவங்கி வைப்பதோ இந்து ஆலயங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பங்கேற்க கூடாது ஆக இந்து அமைச்சர்கள் ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்சி தலைமையேற்க அறநிலைய துறை மற்றும் தமிழக அரசு அனுப்பி வைப்பார்கள் என நம்புவதாக பேட்டியின் போது தெரிவித்தார்.

Views: - 1122

0

0