அவசர கதியில் தரமற்ற சாலை : கொடை மக்களின் புகாருக்கு செவிமடுக்கும் அரசு அதிகாரிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2021, 10:41 am
திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் தரமற்ற சாலை போடப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதியில் மக்கள் விவசாயமே பிரதான தொழிலாகவும் செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்க ஒப்பந்தமும் போடப்பட்டது.
மேலும் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் விடப்பட்ட நிலையில் இன்று பணிகள் மீண்டும் துவங்கியது. ஆனால் அதிகாரிகளின் மேற்பார்வையில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் சாலைகள் தரமற்று போடப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் ஒப்பந்தகாரர்களிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. செண்பகனூர் சாலையை தரமான முறையில் போடவேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
0
0