வடகிழக்கு பருவமழைக்கு நாள் குறிச்சாச்சு : தேதி அறிவித்த வானிலை மையம்!!

17 January 2021, 7:29 pm
Monsoon Rain- Updatenews360
Quick Share

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எந்த தேதி வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இடையில் ஒரு சில மாவட்டங்களில் மழை நின்றாலும், பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது.

இந்தநிலையில் தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டம் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வரும் 19 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை படிப்படியாக விலகும் என குறிப்பிட்டுள்ளது.

Views: - 3

0

0