வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்த்தால்… அமைச்சர் துரைமுருகன் சொன்ன ஷாக் ரிப்போர்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2025, 11:55 am

செய்தியாளர்களை சந்தித்து தமிழக அமைச்சர் துரைமுருகனிடம், தேமுதிக பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் முதல்வரை சந்தித்தது குறித்தும் இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா, இதன் பின்னணி குறித்து கேட்டதற்கு. பின்னணியும் இல்லை முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.

இதையும் படியுங்க: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எண்ணெய் வாங்காது.. நல்ல செய்தி.. டிரம்ப் சொன்னதை கவனிச்சீங்களா!

பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளது குறித்து வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்மூருக்கு வந்திருக்க மாட்டார்கள்.

இங்க வந்திருக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள் அந்த மாதிரி நம் ஊரில் போட முடியாது. ஆகையினால் இது கிரானிக்கள் பிராப்ளம் இதை தலைவர்கள் தான் அணுக வேண்டும்.

வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என காட்பாடி அடுத்த வள்ளி மலையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!