நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் : எண்ணங்களை ஈடேற்றும் ஹோலி பண்டிகை… வடமாநிலத்தவருடன் கொண்டாடிய தமிழர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 12:28 pm

கோவை : கோவையில் வடமாநிலத்தவர்கள் உற்சாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமி நாள் அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வடமாநிலத்தவர்கள் இதனை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

ஹோலி பண்டிகை வண்ணங்களின் விழா என்றும் அன்று மக்கள் ஒருவருக்கு ஒருவா் பல வண்ணப் பொடிகளை பூசி ஒருவருக்கு ஒருவா் மீது வண்ணங்கள் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்வா்.

கோவையை பொறுத்தவதை ஆர்.எஸ்.புரம், பூமார்கெட், சுக்ரவார்பேட்டை, ஒப்பணகார வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு ஹோலி பண்டிகையை முன்னிடு மக்கள் ஒவ்வொருவர் மீது ஒருவர் வண்ணப்பொடியை வீசி ஹோலி பண்டிக்கையை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி ஹோலி வாழ்த்துகளை கூறினர். இதில் கோவையில் உள்ள தமிழ் மக்களும் கலந்து கொண்டு வண்ணப்பொடிகளை வீசி ஹோலியை கொண்டாடினர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!