அண்ணா பற்றி பேச தகுதி இல்லை.. அண்ணாமலை போகிற யாத்திரை வசூல் யாத்திரை… கிழித்தெடுத்த சிவி சண்முகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 12:17 pm

அண்ணா பற்றி பேச தகுதி இல்லை.. அண்ணாமலை போகிற யாத்திரை வசூல் யாத்திரை… கிழித்தெடுத்த சிவி சண்முகம்!!!

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இன்று கோலியனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோலியனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜாகிர்உசேன், தலைமை கழக பேச்சாளர் நடிகை எமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சி.வி.சண்முகம் எம்.பி. பேசியபோது

காங்கிரஸ், பா.ஜ.க. எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகளால் விரட்டியடிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகின்றன. காங்கிரஸ் கட்சியாவது கேரளாவில் காலூன்றி விட்டது. ஆனால் தமிழகத்தில் கக்கன், காமராஜ் தவிர யாராலும் காலூன்ற முடியவில்லை. இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என போராட்டங்கள் செய்து எழுச்சி கண்டது

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாவை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டு தரம் தாழ்ந்து பேசுகிற அண்ணாமலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

அ.தி.மு.க. துணை இல்லாமல் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. மோடி மீண்டும் பிரதமராகுவதற்கு அண்ணாமலைக்கு விருப்பம் இல்லைபோல. திட்டமிட்டே அண்ணாவை அண்ணாமலை இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார்.

அரசியலை பற்றி உனக்கு என்ன தெரியும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. வெற்றி பெற கூடாதென தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அண்ணாமலை பேசுகிறார். அதனால்தான் தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டுவிட்டு அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார் அண்ணாமலை.

இந்து மதத்தை அழிக்க வேண்டுமென ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இந்துக்களை அழிக்க வேண்டுமென திமுக செயல்படுகிறது. பேரறிஞர் அண்ணா பேசாத ஒன்றை பேசியதாக கூறும் அண்ணாமலை, தி.மு.க.வின் கைக்கூலியாக மாறிக்கொண்டிருக்கிறார். உங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்/

அண்ணாமலை போகின்ற பாதயாத்திரை வசூல் யாத்திரை, நானும் ரவுடி, நானும் ரவுடி என்பதுபோல் நானும் மாநில தலைவர், நானும் மாநில தலைவர் என அண்ணாமலை செயல்படுகிறார். அவர் தன் இருப்பை காட்டிக்கொள்ள கூட்டணி தர்மத்தை மீறி பேசிக்கொண்டிருக்கிறார்.

எங்களை விமர்சனம் செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.க.விற்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் முக்கியம் அண்ணாமலை கூட்டணியை பிரிக்க வேண்டுமென்று கங்கனம் கட்டி பேசி கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைமையிடம் வலியுறுத்துவோம் என அவர் பேசினார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!