நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் படுகொலை : புதுச்சேரியில் பயங்கரம்!!

30 September 2020, 12:29 pm
Pondy Murder - updatenews360
Quick Share

புதுச்சேரி : நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கவுன்சிலரை 4பேர் கொண்ட கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து தப்பியோட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (எ) மாந்தோப்பு சுந்தர். முன்னாள் கவுன்சிலரரான மாந்தோப்பு சுந்தர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இவர் அவரது வீடு அருகே உள்ள மேட்டுப்பாளையம் கனரக வாகன நிறுத்தும் இடத்தில் இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சுந்தரை வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இக்கொலை சம்பவம் குறித்து தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த தன்வந்திரி நகர் போலீசார் சுந்தரின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும் தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும் படுகொலை செய்யப்பட்ட மாந்தோப்பு சுந்தர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.