அடக்குமுறையை ஏவி தடுக்க நினைப்பதா..? மக்களாட்சித் தத்துவத்திற்கு மாபெரும் கொடுமை : சீமான் ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
4 May 2024, 1:05 pm

வள்ளலார் பெருவெளியில் அரசு சார்பில் கட்டப்படும் ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசாருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் தெய்வத்தமிழ்ப்பேரவை இணைந்து இன்று (04-05-2024) வடலூரில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்பு… கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தொடர்பா..? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்..!!

மேலும் தமிழ்நாடு முழுமைக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களையும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உரியது. கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, அடக்குமுறையை ஏவும் இத்தகைய நிர்வாகச்செயல்பாடு மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் கொடுமையாகும்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தெய்வத்தமிழ்ப் பேரவையினரையும் கைது செய்திருப்பதால், நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதியைப் பெற்று, ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் பேரேழுச்சியாக மீண்டும் நடத்தப்படுமெனவும், வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படும் எனவும் பேரறிவிப்பு செய்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

  • many production companies are applying for the title operation sindoor போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!