கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா?
4 September 2020, 12:31 pmகோவை : கோவையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கையும் கனிசமான அளவு உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அதாவது ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், கோவையில் கொரோனா பரிசோதனைகள் குறைவாக உள்ளதாகவும், பரிசோதனைகளை அதிகாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதனால், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தொற்றுக்கு உள்ளானோர் அதிக அளவில் கண்டறிப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக தொற்று கண்டறியப்படுவோர் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 342 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் உச்சபட்ச அளவாக 593 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை கோவையில் 17 ஆயிரத்து 258 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் வைரஸ் தொற்றில் இருந்து குணமாக எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 486 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை ( நேற்று மாலை நிலவரப்படி) கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 564 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 376 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0