கோவை தனியார் மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் வெட்டிக் கொலை : பின்தொடர்ந்து வந்தே காரியத்தை முடித்த நபர்.. ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 5:43 pm

கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த நான்சி என்ற பெண் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையான குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த நான்சியை பின் தொடர்ந்து சென்ற அவரது கணவர் வினோத் மருத்துவமனை வளாகத்திற்குள்ளே வைத்து தான் கொண்டு வந்த கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிர்ச்சிணை நிலவி வந்ததாக கூறப்படுகிறது

கணவர் வினோத்தை போலீசார் கைது செய்தனர். கத்தியால் குத்திய போது இவரது கையிலும் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனி தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மருத்துவமனை வளாகத்தில் வைத்து மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!