கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த நடனமாடிய செவிலியர் : வைரலாகும் வீடியோ!!

12 July 2021, 7:44 pm
Nurse Dance- Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளை உற்சாகப்படுத்த செவிலியர் நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தாலும் கோவை மாவட்டம் தான் கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் குணமடைவோரின் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது.

நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளித்தாலும் அவர்களுக்கு மன நிம்மதி தான் நோயை முற்றிலும் குணமடைய செய்யும். இதைத் தவிர்க்க தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுடன் படுகர் இன மக்களின் பாடல்களை போட்டு அவர்களுடன் செவிலியர் ஒருவர் ஆடும் நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படுகர் இன பாடலுக்கு ஆடும் செவிலியருடன் நோயாளியும் சேர்ந்து நடனமாடினார். நோயளிகளின் மன உளைச்சலை போக்கி உற்சாகமூட்ட செவிலியர் செய்யும் இந்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.

Views: - 119

0

0