எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்…. பரபரப்பான அரசியல் சூழலில் ஓபிஎஸ் ட்வீட்!!!

Author: Aarthi
5 October 2020, 10:48 am
OPS- Updatenews360
Quick Share

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்வதில் பனிப்போர் நிலவி வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் வருகிற 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய பரபரப்பான சூழலில், தனது ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் வெளியிட்டுள் ட்விட்டர் பதிவில், ‘தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 44

0

0