இதயத்தை உலுக்கிய ரயில் விபத்து… பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை ; பாஜக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு… அண்ணாமலை அறிவிப்பு

Author: Babu Lakshmanan
3 June 2023, 11:27 am

ரயில் விபத்தில் தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு, இந்த பேரிழப்பைத் தாங்கும் சக்தியை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- ஒதிஷாவின் பாலசோர் பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நடந்த பயங்கர ரயில் விபத்து, மிகுந்த வேதனை தருவதாகவும், இதயத்தை உலுக்குவதாகவும் உள்ளது. தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு, இந்த பேரிழப்பைத் தாங்கும் சக்தியை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.

இந்த பயங்கர ரயில் விபத்தைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடத்தவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் தமிழக பாஜக ஒத்தி வைத்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் பத்திரமாகத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை, ரயில்வே துறை மற்றும் ஒதிஷா மாநில பாஜக தொண்டர்களுடன் இணைந்து, அகில இந்திய ரெயில் பயணிகள் வசதிகள் அமைப்புக் குழு உறுப்பினரும், மத்திய சென்னை கிழக்கு தமிழக பாஜக பார்வையாளரும் ரவிச்சந்திரன் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார், என தெரிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?