கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை : மின் வாரியம் அறிவிப்பு!!

23 June 2021, 10:41 am
EB - Updatenews360
Quick Share

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகைகள் வழங்கி மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்றால் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. தற்போத மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் ஏற்படுத்தப்படவில்லை. எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா அதிகமுள்ள கோவை, நீலகிரி, நாகை, மயிலாடுதுறை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மின்வாரியம் அறிவித்திருக்கும் சலுகைகளின்படி, இம்மாதத்திற்கான மின் கட்டணத்தை, 2019 ஆண்டு ஜூன் மாதத்தில் செலுத்தப்பட்ட தொகையினை உத்தேசமாக கணக்கீடு செய்து கட்டலாம் எனத் தெரிவித்துள்ளது.

அந்த கட்டணம் கூடுதலாக இருப்பதாகக் கருதுபவர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான மின் கணக்கீட்டின்படி உத்தேசமாக மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் மின்வாரியம் கூறியிருக்கிறது.

Views: - 93

0

0