காஞ்சிபுரம் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : லஞ்சம் பெற்ற அதிகாரிகள் அதிரடி கைது!!

24 December 2020, 10:35 am
Kanchi Birbery -Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் நில மதிப்பீடு நிர்ணயம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவாளரின் உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் வீட்டு மனைப்பிரிவு நிலத்திற்கு பத்திரப் பதிவு செய்வதற்காக அரசு நில கையேடு மதிப்பீடு செய்து வழங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார்.

மனை பிரிவிற்கு அரசு நில கையேடு மதிப்பீடு நிர்ணயம் செய்து வழங்குவதற்காக மாவட்ட பதிவாளரின் உதவியாளர் சதீஷ்குமார், அலுவலக உதவியாளர் பாலாஜி ஆகியோர் ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.

இது குறித்து திருநாவுக்கரசு லஞ்ச ஒழிப்புத் துறை போலிஸில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயணம் தடவிய ரூபாயை திருநாவுக்கரசு சதீஷ்குமார், பாலாஜியிடம் வழங்கினார்.

அப்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர்கள் அண்ணாதுரை, கீதா, தமிழரசி, நாகலட்சுமி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் மறைந்திருந்து கையும் களவுமாக சதீஷ்குமார் மற்றும் பாலாஜியை ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0