நெல் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்… அரசு செவி சாய்க்குமா…? என்ற ஏக்கத்தில் விவசாயிகள்..!!

2 July 2021, 1:49 pm
paddy - updatenews360
Quick Share

தஞ்சை ; தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 3000 மூட்டை நெல்லினை கொள்முதல் செய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பட்டுக்கோட்டை தாலுகா கட்டயங்காடு உக்கடையில் 2 வாரமாக கிட்டத்தட்ட 3000 மூட்டை நெல்களுடன் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். அறுவடை செய்து குவித்து வைத்துள்ள நெற்களை கொள்முதல் செய்ய கூறி அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்த பொழுது, பட்டுக்கோட்டை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த 3000 மூட்டைகளையும் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் கொண்டு செல்வதென்றால், தங்களுக்கு அதிக கால விரயமும், பொருளாதார இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இதே பகுதியில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து மூட்டைகளை வாங்கிக் கொண்ட அரசு, தற்போது கொள்முதல் நிலையம் அமைக்க மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, இதுபோன்ற அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மாவட்ட ஆட்சியர் அல்லது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் தலையிட்டு, மழை மற்றும் வெயிலில் கிடந்து நெல் மூட்டைகள் அழியும் முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 166

0

0