வாடகை பாக்கி எங்கே? அவகாசம் கொடுத்தும் அசால்ட்.. மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு அதிரடி சீல் வைத்த அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 4:16 pm

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குமரன் வணிக வளாகம், தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் , பழைய பேருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாநகராட்சி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளது.

இப்பகுதிகளில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு ஏற்கனவே வாடகைத் தொகை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இதுவரை நிலுவை வாடகை தொகையை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேரில் சென்று சீல் வைக்கப்பட்டது .

தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் உள்ள 17 கடைகளில் கடைகளின் வாடகை தொகை செலுத்தாதன் காரணமாக 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது . 26 லட்சம் வாடகை நிலுவை இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாநகராட்சி பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் நிலுவை வாடகை தொகையை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!