பத்திரப் பதிவுத்துறையில் விதிகளை மீறும் அதிகாரிகள்.. விரைவில் இடமாற்றம் : அமைச்சர் மூர்த்தி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2021, 5:16 pm
Madurai Murthy- Updatenews360
Quick Share

மதுரை : பத்திர பதிவுத்துறையில் விதிமீறி செயல்படும் அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் பாராட்டும் வரை சீர் திருத்த நடவடிக்கைகள் தொடரும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பாலை பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கோரிக்கை மனு பெறும் பணிகளில் வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதாள சாக்கடை, குடிநீர், சாலை வசதிகள், முதியோர் பென்ஷன் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். மனுக்கள் துறை ரீதியாக பிரிக்கப்பட்டு ஒரிரு மாதங்களில் குறை தீர்க்கப்படும்.

மனுக்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ள மாட்டோம், அவற்றின் மீது உரிய நடவடிக்கையும் எடுப்போம். நிறுத்தப்பட்ட முதியோர் பென்ஷன் பயனாளிகள் நிலை குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கும் பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திர பதிவுத்துறையில் விதிமீறி செயல்பட்ட 30 அதிகாரிகள், அலுவலர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே நேற்று 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் மேலும் 26 பேர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். மக்கள் பாராட்டும் வரை பதிவுத்துறையில் இதுபோன்ற சீர் திருத்தங்கள் தொடரும் என தெரிவித்தார்.

Views: - 372

0

0