ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… சர்ச்சை பாடலுக்கு Male Version பாடலை வெளியிட்டு ஆண்கள் பதிலடி… வைரலாகும் பாடல்..!!

Author: Babu Lakshmanan
22 December 2021, 1:44 pm
Quick Share

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் male version பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியானது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, இல்லையோ, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் நடனமாடிய ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

ஆண்களை தவறான எண்ணம் கொண்டவர்களைப் போன்ற வரிகள் இடம்பெற்றிருப்பதால் இந்தப் பாடலுக்கு ஆண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இந்தப் பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் பாடலை தடை செய்யக் கோரி ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேபோல, இந்தப் பாடலை தடை செய்யாவிட்டால், பாடலை பாடிய நடிகை ஆண்ட்ரியா, நடனம் ஆடிய சமந்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்தது.

இதனிடையே, இந்தப் பாடலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், பெண்களை கிண்டலடித்தும் Male Version பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பாடலின் தமிழ் வரிகள் பின்வருமாறு,

புல்லட் வண்டில வந்தா சூப்பரா இருக்குன்னு சொல்றீங்க
ஏசி கார்ல இன்னோருத்தன் வந்தா பைக்குக்கு பாய் சொல்றீங்க
வண்டி இல்ல, காரு இல்ல Chanceக்காக காத்திட்டு இருக்கீங்க
உண்மையா சத்தியமா சொல்றேன்
உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

சிக்ஸ் சிக்ஸு Pack இருந்தா Sexy-யா இருக்குன்னு சொல்றீங்க
டப்போடு ஒருத்தன் தொப்பையோட வந்த Pack-னா என்னனு கேக்குறீங்க
பேக்கும் இல்ல தொப்பையும் இல்ல உங்க டார்கட் டப்புங்க
அழகா இருந்து என்ன பிரயோஜனம் உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி.

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

ஷாப்பிங் கீப்பிங் கூட்டிட்டு போய் சர்வ நாசம் பண்றீங்க
சினிமா கினிமான்னு கூட்டிட்டு போய் வச்சி செஞ்சி விட்டுறீங்க
Atm Paytm தவற வேற ஒன்னும் இல்லைங்க
Moneyஅ மட்டும் பாத்துட்டு மனச பாக்க மாற்றீங்க
உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

உன் கூட தான் என் வாழ்கைனு வாய் கிழிய சொல்றீங்க
என் மனசு உசுரும் நீ தான்னு எங்கள முறுக்கேத்துறீங்க
மனசும் இல்ல உசுரும் இல்ல .
சந்தர்ப்பம் வந்துச்சின்னா உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

மேலும், இந்தப் பாடலின் தெலுங்கு version-ஐ இசையமைப்பாளர் டிஎஸ்பி பகிர்ந்து கமெண்ட் தெரிவித்துள்ளார்.

Views: - 787

5

1