ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி நூதன திருட்டு… விபரத்தை கேட்டு கைவரிசை காட்டிய பெண் ஓடடுநர்!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 2:18 pm

ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி விபரத்தை கேட்டறிந்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த பெண் ஓட்டுநரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த செந்தாமரை. அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஓலா நிறுவனம் மூலம் ஆட்டோ புக் செய்துள்ளார்.

வீட்டிற்கு ஓலா ஆட்டோ ஓட்டுனராக பெண்மணி ஒருவர் வந்துள்ளார். அந்த பெண்மணியிடம் ஐந்து நிமிடம் காத்திருக்கும் படி கூறிவிட்டு வீட்டின் முன் கதவை பூட்டிக்கொண்டு சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு ஆட்டோவில் எறியுள்ளார்.

பின் அவரை அழைத்து கொண்டு ஆவடி காமராஜர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுனராக வந்த பெண்மணி, செந்தாமரையிடம் எப்பொழுது வருவீர்கள், சொந்த வீடா, என்ன வேலை செய்கிறீர்கள் என்று விசாரித்த படி பேசி வந்துள்ளார்.

பின்னர் உடனே வருவது என்றால் மீண்டும் என்னையே தொடர்பு கொண்டு அழையுங்கள் என்று கூறிவிட்டு,அவரை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு சென்றார்.

இந்நிலையில் செந்தாமரை மீண்டும் மறுநாள் காலை 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டி இருந்த வீடு திறந்து கிடந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து,வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 1 சவரன் கம்மல்,50 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக செந்தாமரை ஆவடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் ரமணி விசாரணை நடத்தினார்.

இதையும் படியுங்க: அரசுக்கு ஆபத்து? முதலமைச்சர் வர உள்ள நிலையில் திருப்பதி தங்க கொடி மரத்தில் சேதம்.. தேவஸ்தானம் அதிர்ச்சி!

விசாரணையில் வீட்டில் வேலை செய்யும் பெண் சந்தேகம் படும் படி இருந்தார். அந்த பெண்ணை விசாரித்த போது நான் 11 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது வீட்டின் உரிமையாளர் உறங்கிக் கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து வீட்டின் பின்புறம் உள்ள பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு சென்றேன் என்று கூறினார்.

இதையடுத்து காவல்துறையினர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 10:30 மணி அளவில் மீண்டும் ஓலா ஓட்டி வந்த பெண்மணி முகத்தை புடவையால் மறைத்து கொண்டு வீட்டின் உள்ளே நுழையும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

ஆவடி போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஓலா நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு போலீசார் ஓட்டுனரைப் பற்றி தகவல் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கான முறையான பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!