முதியவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதறிய மக்கள்…!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 4:17 pm
Quick Share

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு வாட்டாக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (60). ஈயம் பூசும் தொழில் செய்யும் சேகர் தலைஞாயிறு காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மகன் சபரீஷ் மற்றும் அருள்ராஜா ஆகியோர் நீரில் மூழ்கியும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்த நிலையில், இவரது மனைவி குமுதம் (56) கடந்த மாதம் 13 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

மனைவியின் துக்கநிகழ்வில்கூட பங்கேற்காத கணவர் சேகர், தனது மாற்று திறனாளி மகள் சிவகாமசுந்தரியை வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் படிக்க வைத்துள்ளார். இதனிடையே, குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றித்திரிந்த சேகர், யாரை பார்த்தாலும் தான் தீக்குளிக்க போகிறேன் என புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகைதந்த அவர், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீவைத்துகொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி ஏறிந்ததை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அனைத்து முதியவரை காப்பாற்றினர். ஆனால் 80 சதவீத தீக்காயங்களுடன் முதியவர் முழுவதும் எரிந்ததால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார், அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 211

0

0