சோழர் காலத்து பெருமாள் சிலை: மறைத்து வைத்து 2 கோடிக்கு விற்க முயன்ற கும்பல்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!

Author: Sudha
10 August 2024, 10:51 am

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலை கடத்தப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழா பட்டியில் வழியே வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அதில் பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலை மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் இருந்த
ஏழு பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷ் என்பவரின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்ட போது, சிலை கிடைத்துள்ளது ஆனால் இது குறித்து வருவாய் துறையினரிடம் தகவல் அளிக்காமல், தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார்.

தினேஷ் அவரது தந்தைக்கு பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்து இருந்த சிலையை கண்டெடுத்துள்ளார்.
அவரும், வருவாய்துறையினரிடம் தெரிவிக்காமல் சிலையை 2 கோடிக்கு விற்பனை செய்ய தினேஷ் திட்டமிட்டுள்ளார். இதில் தனது நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார்.

பிறகு தினேஷ் தனது நண்பர்களுடன் சிலை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்து சிலையை பறிமுதல் செய்தனர்.

இந்த சிலையானது 15 முதல் 16ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலத்து சிலையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?